'ஐ' இசை வெளியீட்டு விழாவில் அர்னால்ட் |
இயக்குநர் ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக ‘ஐ’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பேசினார்.
விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ திரைப்படத்தின் இசை
வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. ஐ
படத்தின் இசைத்தட்டை ரஜினிகாந்த் வெளியிட புனித் ராஜ்குமார்
பெற்றுக்கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக
ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு கலந்து
கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசை
அமைப் பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,, இயக்குநர் விஜய், அமலாபால், அனிருத்,
ராய்லஷ்மி உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அர்னால்டு பேசிய தாவது:
என்னோட வெற்றிக்கு காரணம் ரசிகர்கள்தான். அதேபோல பல ரசிகர்களின் ஆதரவோடு
வெற்றி சாதனைகளை புரிந்துள்ள இந்திய சினிமா நட்சத்தி ரங்களோடு இந்த
மேடையில் இணைந் திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஷங்கர் அற்புதமான
இயக்குநர். நிறைய பாடி பில்டர்கள் இங்கே நடித்துள்ளனர். ஷங்கர் வாய்ப்பு
கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி. நானும் பாடி பில்டராக வந்து
பிற்காலத்தில் நடிகனாக வந்தவன் என்பது பெருமை அளிக்கிறது. எனினும்,
வாய்ப்பு தேடி வந்துள்ளேன். என்னை வைத்து எப்போது படம்
எடுக்கப்போகிறீர்கள். என்னை ஏன் ஷங்கர் நடிக்க அழைக்கவில்லை என்று
தெரியவில்லை. ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சென்னை
அற்புதமான இடம். இதற்கு முன் இந்தியா வந்தாலும் சென்னைக்கு வந்தது இதுதான்
முதல் முறை. தொடர்ந்து இங்கு வர நான் விரும்புகிறேன்.
இவ்வாறு பேசிய அர்னால்ட் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்பாகவே அரங்கில் இருந்து கிளம்பினார்.
பின்னர் புனித் ராஜ்குமார் பேசும்போது, ‘‘ரஜினி இருக்கும் மேடையில் நான் இருப்பதை பற்றி விவரிக்க வார்த் தைகளே இல்லை’’ என்றார்.
அனிருத் கூறும்போது ‘‘ ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பதை பெருமையாக நினைக்கிறேன்’’ என்றார்.
விக்ரம் பேசுகையில், ‘‘ஒவ்வொரு காட்சிக் கும் தினமும் 4 மணி நேரம் மேக்கப்
போடவே நேரம் ஆகும். காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதில் ஷங்கர் அப்படி
கவனமாக இருப்பார்’’ என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, ‘‘ஷங்கருடன் இணைந்து 20 ஆண்டுகள் ஓடியதே தெரிய
வில்லை. இந்தப்படத்துக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு
செய்திருக்கிறோம்’’ என்றார்.
No comments:
Post a Comment